Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர்டெல்: ஹேப்பி ஹேப்பி தீபாவளி!!

ஏர்டெல்: ஹேப்பி ஹேப்பி தீபாவளி!!
, புதன், 26 அக்டோபர் 2016 (10:44 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீபாவளி சலுகையை வழங்கிய உள்ளன. அப்படியாக, பயனர்கள் தங்களிடம் இருக்கும் சிம் அட்டையை 4ஜிக்கு அப்கிரேட் செய்வதின் மூலமாக இலவசமாக 2ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். 


 
 
ஆனால் இதை பெற சில விதிமுறைகளை பின் பற்ற வேண்டும்...
 
ஏர்டெல் சிம் அப்கிரேட்: 
 
2ஜி அல்லது 3ஜி ஏர்டெல் சிம்தனை ஒரு 4ஜி சிம்மாக மாற்ற  www.airtel.in/4g/sim-swap என்ற வலைத்தளத்திக்குள் நுழையவும்.
 
பெயர், ஏர்டெல் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, மற்றும் ஷிப்பிங் முகவரியை உள்ளிட வேண்டும். பின்னர் சென்ட் மீ ஏ 4ஜி சிம்' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
 
ஏர்டெல் 4ஜி சிம் அட்டை தயாராகி பெற்றவுடன், 2ஜி அல்லது 3ஜி சிம் அட்டையின் 20 இலக்க சிம் நம்பரை 121 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
 
எஸ்எம்எஸ் அனுப்பிய பின்னர், ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வரும். இந்த எஸ்எம்எஸ் ஆனது அனுப்பிய சிம்  அப்கிரேட் கோரிக்கையை ஏற்க ஏர்டெல் சரிபார்ப்பு எஸ்எம்எஸ் பின்னர், அதை உறுதிப்படுத்த "1" என்ற பதிலை சமர்ப்பிக்கவும்.
 
பழைய ஏர்டெல் சிம் கார்ட்டின் நெட்வர்க் சில நிமிடங்களில் துண்டிக்கப்படும். சேவை துண்டிக்கப்பட்டதும் ஏர்டெல் 4ஜி சேவையின் நன்மைகளை அனுபவிக்க ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செயல்முறைக்கு பிறகு, ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து இலவசமாக 2 ஜிபி அளவிலான 4ஜி தரவு வரவு வைக்கப்படும். சிம் அப்கிரேட் நிகழ்த்துபவருக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் அழைத்தார், சென்றோம்; அவர் ஏன் வரவில்லை? - ஸ்டாலின் கேள்வி