Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்திகளை அறிய ட்விட்டரை பயன்படுத்தும் பெரும்பான்மை இந்தியர்கள்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2009 (14:40 IST)
பிளாக் என்று அழைக்கப்படும் வலைப்பதிவிற்கு பிறகு தற்போது பிரபலமடைந்து வரும் ட்விட்டர் என்பது ஒரு சிறிய அளவிலான செய்திகளை அளிக்கும் பிளாக் என்பதாக மட்டுமே அறியப்பட்டு வந்தது. ஆனால் இந்தியர்களில் பெரும்பான்மையோர் உடனடி செய்திகளை அறிந்து கோள்ள ட்விட்டரை பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தொழில் நுட்ப இணைய தளமான 'ப்ளக்டு இன்' என்ற வலைத்தளம் நடத்திய ஆய்வில் 16% இந்தியார்கள் உடனடி உலக நடப்புகளை தெரிந்துகோள்ள, அதாவது செய்திகளை தெரிந்து கோள்ள ட்விட்டரை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

11% பேர் தங்கள் நண்பர்களுடன் உரையாடுவதில் நேரத்தை செலவிடுகின்றனர், 10% பேர்கள் ஆராய்ச்சிக்காக ட்விட்டர் மூலம் இணையதளங்களை தேடுகின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜேக் டோர்சே என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நட்புப் பகிர்வு இணையதளம், மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், அதாவது 26/11 என்று அழைக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் போது 5 வினாடிகளுக்கு ஒரு முறை குறுஞ்செய்திகளை அளித்து வந்தது. குறிப்பாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் பட்டியலை வெளியிட்டுக் கொண்டே வந்தது. இதன் மூலம் இது நாடு முழுதும் பிரபலமடைந்தது.

மத்திய அமைச்சர் ஷாஷி தரூர் வைத்துள்ள ட்விட்டர் குறுஞ்செய்தி தளத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை மட்டும் 3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நவீன ட்விட்டர் வகை இணையதளங்கள், 6 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களான கூகுளின் ஆர்குட், ஃபேஸ்புக் ஆகியவற்றிற்கு கடும் சவாலாக திகழ்கிறது.

இந்தியாவில் மட்ட்டும் ஃபேஸ் புக் இணையதளத்திற்கு 80 லட்சம் பயனாளர்கள் எனில் ஆர்குட் இணையதளத்திற்கு சுமார் 1 கோடியே 60 லட்சம் பயனாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் 1.4 மில்லியிஅன் நபர்கள் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அதாவது ஜெர்மனி, அமெரிக்காவிற்கு பிறகு ட்விட்டர் பயனாளர் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது.

செல்பேசிகள் வழியாக இந்த ட்விட்டரை அணுக முடியும் என்பதால் இதன் பயனாளர் எண்ணிக்கை உலகம் முழுதும் சுமார் 50 பில்லியன் பேர்களாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ட்விட்டர் மூலம் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments