Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகரத்தை நோக்கி

Webdunia
( தலேட்டா சுரேந்தர் குமார்)

இணையதளங்கள் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி உள்ளன. ஆனால் ஆங்கிலத்தை தவிர வேறு மொழிகளில் அவை இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்க இயலும ்? நாட்டில் இணைய தளங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு அதனை அணுகுவதற்கும் பெறுவதற்குமான வசதி குறைவு என்பதோடு உள்ளூர் மொழிகளில் அது குறைந்த அளவில் இருப்பதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ராப்டார்.காம் ( raftaar.co m) என்னும் இந்தியின் முதல் தேடு பொறியை ( Search Engin e) உருவாக்கிய டெல்லியை சேர்ந்த இன்டிகஸ ் நெட்லாப்ஸ ் நிறுவனத்தின் இயக்குனர் லவீஷ் பண்டாரி இந்தி மற்றும் இதர உள்ளூர் மொழிகளில் இணையதளங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றாலும் ஒருங்கிணைப்பு இல்லாததே உண்மையான பிரச்சனை என்று கூறுகிறார்.

இந்தியில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் இணையதளங்கள் உள்ளன ஆனால் அவற்றில் 85 சதவிகிதம் ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் கொண்டவை. செய்தி அடிப்படையிலான ஒரு சில இணையதளங்கள் தவிர மற்ற அனைத்தும் வர்த்தக அடிப்படையற்ற சுயநிதி அல்லது தனிப்பட்ட இணையதளங்கள் ஆகும். மற்ற அனைத்தும் கல்வி அடிப்படையிலானவை அல்லது அரசு இணைய தளங்கள் ஆகும் என்கிறார் பண்டாரி. எனினும் ஈநாடு.நெட் மற்றும் வெப்துனியா.காம் போன்ற வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற நிறுவனங்கள் பிராந்திய மொழிகளிலான இன்டெர்நெட் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பு இருப்பதை உணர்த்தியுள்ளன.

மொழியைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதும் வெப்துனியா.காம்-ன் குறிக்கோள். 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட வெப்துனியா.காம் உலகின் முதல் உள்ளூர் மொழியில் ஈமெயில் அனுப்பும் (தற்போது 11 மொழிகளில் உள்ளது) சேவை அளிக்கும் ஈபத்ரா.காம்-ஐ அறிமுகப்படுத்தியது. இன்று ஈபத்ராவை 15 லட்சம் பதிவு பெற்ற பயனீட்டாளர்கள் பயன்படுத்தி வருவதாக வெப்துனியா ஆசிரியர் ஜெய்தீப் கார்னிக் கூறுகிறார். வெப்துனியா 1999 செப்டம்பரில் பிராந்திய மொழியில் அரட்டை ( Cha t) செய்வதற்கான ஈவார்த்தாவை அறிமுகப்படுத்தியது.

2000- வது ஆண்டில் அது தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் முறையே வெப்உலகம்.காம் வெப்பிரபஞ்சம்.காம் வெப்லோகம்.காம் ஆகிய இணையதளங்களை அறிமுகப்படுத்தியது. தோராயமாக மாதம் ஒன்றுக்கு தமது அனைத்து இணைய தளங்களிலும் 65 மில்லியன் பக்கங்கள் பார்வையிடப்படுவதாக வெப்துனியா கூறுகிறது.

இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நாங்கள் குறிவைத்துள்ளோம். எங்களது பயனீட்டாளர்களில் 75 சதவிகிதம் உள்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள். 50 சதவிகிதம் பேர் பெருநகரங்களுக்கு வெளியே பக்பாத் பாராமதி சாகர் காண்ட்வா ஜந்த் போன்ற தொலைதூர ஊர்களில் வசிப்பவர்கள் என்கிறார் கார்னிக். வெப்துனியாவை நோக்கி இணையதளம் பயன்படுத்துபவர்களை இழுப்பது எத ு?

தங்கள் சொந்த மொழிலேயே செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ள விரும்பும் அர்ப்பணிப்பு தன்மை உடையவர்கள் 80 சதவிகிதம் பேர். மீதமுள்ளவர்கள் தங்கள் தாய்மொழியில் மிகுந்த ஈடுபாடும் பிராந்திய மொழி இணையதளங்களை பார்வையிட விருப்பமும் உடையவர்கள் என்கிறார் கார்னிக்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments