Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபத்துக்கு கை கொடுக்கும் புதிய ஜிவி 2010 மொபைல் போன்

ஆபத்துக்கு கை கொடுக்கும் புதிய ஜிவி 2010 மொபைல் போன்
, வியாழன், 18 ஜூலை 2013 (20:37 IST)
FILE
ஆபத்துக்கு கை கொடுக்கும் புதுமையான வசதியுடன் ஜிவி 2010 (Jivi 2010) என்ற மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் மற்ற மொபைல்களில் இல்லாத ஒரு கூடுதல் வசதி உள்ளது. அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆபத்து நேரும் போது இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும். ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர், அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ, அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, உடன் அந்த போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். பின்னர், அடுத்த எண்களை இதே போல அழைக்கும்.

இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய ஃபார்மட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது.

இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லாக், ஆட்டோ கால் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
webdunia
FILE

Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டைலாக மெட்டலிக் மற்றும் குரோம் பூச்சு இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,699 என்றாலும், கடைகளில் ரூ.1,350க்குக் கிடைக்கிறது. Infibeam, gadgets.in, ebay.in, shopclues.com, and Tradus.com ஆகிய இணைய தளங்கள் வழியாகவும் இதனைப் பெறலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil