Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிவுச் சொத்துரிமை இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்: மைக்ரோசாஃப்ட்

அறிவுச் சொத்துரிமை இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்: மைக்ரோசாஃப்ட்
, வியாழன், 3 பிப்ரவரி 2011 (13:59 IST)
மென்பொருள் களவாடல் இந்தியாவில் குறையும் என்று கூறியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அறிவுச் சொத்துரிமை (Intelectual Property Rights) நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுவரும் மென்பொருள் மாநாட்டில் பேசிய பிறகு பி.டி.ஐ. செய்தியாளரிடம் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள் களவாடல் தடுப்புப் பிரிவின் தலைமை ஆலோசகர் டேவிட் ஃபினஇவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவுச் சொத்துரிமை நடைமுறையாக்கல் அவசியமானது. அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிடும். இதனால் வரி வருவாய் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், படைப்புத்திறனை அதிகரிக்கும்” என்று டேவிட் ஃபின் கூறியுள்ளார்.

உலகளாவிய அளவில் மென்பொருள் களவாடலால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும், இந்தியாவில் 65 விஉழக்காடு மென்பொருட்கள் களவாடல்களே என்றும் டேவிட் ஃபின் கூறியுள்ளார். இதனால் நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வேலை வாய்ப்பும் பல இலட்சக்கணக்கில் பறிபோகிறது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil