Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு – நிறுத்தப்பட்டது ஐபிஎல் தொடர்!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (13:12 IST)
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி வரும் நிலையில் ஐபிஎல் தொடரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாளை நடக்க உள்ள போட்டியை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி வீரர் வ்ரத்திமான் சஹாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வீரர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாவதை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்படும் இந்த தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments