Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: பெங்களூரு பந்துவீச்சில் வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்

Webdunia
வியாழன், 21 மே 2015 (09:11 IST)
நேற்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 71 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி.
 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால், கோப்பையை வெல்ல ஒவ்வொரு அணியும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கெய்ல், கோலி சற்று ஏமாற்றினாலும் பின் வந்த டிவில்லியர்ஸ் மற்றும் மந்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை சேகரித்தது. 
இடைத்தொடர்ந்து விளையாடிய  ராஜஸ்தான் அணி, தொடக்கத்திலேயே வாட்சன் விக்கெட்டை பறிகொடுத்தது. பின் இணைந்த சாம்சன், சுமித் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி ரன் சேகரிக்க முடியாமல் பறிதவித்தது. எனினும் ஒருமுனையில் ரகானே மட்டும் போராடிகொண்டிருந்தார்.
 
ரகானேவும் 42 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு மங்களானது. பின் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட இறுதியில் ராஜஸ்தான் அணி 109 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பெங்களூர் அணி 71 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments