Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகிர் கான், புஜாரா ஆகியோருக்கு கல்தா

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2014 (10:10 IST)
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணித் தேர்வில், ஏற்கனவே இருந்த அணிகளில் இருந்து யுவராஜ்சிங், தினேஷ் கார்த்திக், ஜாகிர் கான், புஜாரா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
வரும் 2015ஆம் ஆண்டு, ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 8ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி நாளாகும்.
 
இந்த வகையில், கடந்த ஆண்டில் அதிக தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலம் போன யுவராஜ்சிங்கை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலை விடுவித்து இருக்கிறது.
 
இதேபோல் கடந்த ஆண்டில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்த தினேஷ் கார்த்திக், கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி விடுவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
 
மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், மைக் ஹஸ்ஸி, பிரவீன்குமார் ஆகியோரை விடுவித்து இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விஜய் உள்பட 13 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

Show comments