Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் டி20: சேப்பாக்கம் மைதானத்தில் லீக் ஆட்டங்கள்

Webdunia
வியாழன், 12 பிப்ரவரி 2015 (14:17 IST)
8 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 16 ஆம் தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால் இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி சென்னை சூப்பர் சிங்ஸ் அணி ஏப்ரல் 9 அன்று இரவு 8 மணியளவில்  டெல்லியுடன் மோதுகிறது. மேலும் ஏப்ரல் 11 சுமார் 4 மணியளவில் ஐதராபாத் அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.
 
ஏப்ரல் 25 இரவு 8 மணிக்கு பஞ்சாப்புடன் மோதவுள்ளது. மேலும் ஏப்ரல் 30  இரவு 8 மணிக்கு கொல்கத்தாவுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது. மேலும் மே 4 அன்று பெங்களூருடனும், மே 8 மும்பையுடனும், மே 10 அன்று ராஜஸ்தான் அணியுடனும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments