Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல்: புதிய மைல்கல்லை எட்டுவாரா கவுதம் கம்பீர்?

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2015 (12:41 IST)
புனேயில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், ஒரு புதிய மைல்கல்லை எட்ட கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் இன்றைய 8 மணி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் வெற்றிகளை பதிவு செய்துள்ளதால் இப்போட்டியை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

 
மேலும் இப்போட்டியில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 79 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அவர் ஒரு புதிய மைல்கல்லை எட்டலாம். ஆம் கம்பீர் 3000 ரன்களை கடந்த 3 ஆவது வீரர் என்ற சிறப்பை பெறலாம். இதற்கு முன்னதாக சென்னை வீரர் ரெய்னா, மும்பை வீரர் ரோகித் சர்மா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். 
 
எனினும் இன்றைய போட்டியில் இந்த சிறப்பை கம்பீர் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தற்போது ஐ.பி.எல். போட்டியில் அதிக அரை சதம் எடுத்த வீரராக கம்பீர் உருவெடுத்துள்ளார். இதுவரை கம்பீர் 25 அரை சதங்களை எடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

Show comments