Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஒரு எனர்ஜியோடு ஓய்வா? முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் ஏபிடி – சொன்னது யார் தெரியுமா?

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (10:20 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏ பி டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 194 ரன்களை சேர்த்தது. இதில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறிய மைதானமாக இருந்தாலும் அனைத்து பேட்ஸ்மேன்களுமே பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினர். இதன் மூலம் அந்த அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடிக்க முடியாமல் திணற டிவில்லியர்ஸ் மட்டும் அடித்து வெளுத்தார். அவரது அந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமில்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘டிவில்லியர்ஸ் தான் அறிவித்த ஓய்வு முடிவில் இருந்து வெளியே வரவெண்டும்’ எனக் கூறியுள்ளார். டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவதை நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments