Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சொதப்பலில் பஞ்சாப்…மேக்ஸ்வெல்லை தூக்கவேண்டும்- மூத்தவீரர் தடாலடி!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:55 IST)
பஞ்சாப் அணியில் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல்லை தூக்கவேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணி இந்த சீசனை மிகவும் சிறப்பாக தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் மிகவும் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். ஆனால் மோசமான பேட்டிங் ஆர்டரால் வரிசையாக 4 போட்டிகளை தோற்றுள்ளது.

அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எல்லாப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதுவரை நடந்த  5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை.  இதனால் அவரை தூக்கிவிட்டு அவருக்குப் பதில் கிறிஸ் கெய்லை விளையாட வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் ‘மேக்ஸ்வெல்லை அணியில் இருந்து நீக்கவேண்டும் அல்லது இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments