Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த சர்ச்சையும் இல்லாமல் கேப்டன் பொறுப்பு எனக்கு வந்துள்ளது – மோர்கன் பதில்!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (16:26 IST)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவி தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து மோர்கனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 7 போட்டிகளில் மற்ற அணிகளோடு மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி ஐபிஎல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த முதல் சுற்றில் 7 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இயான் மோர்கன் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இரண்டாம் சுற்று ஆட்டங்களுக்கு இவரே கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் பேசிய மோர்கன் ‘எந்த சர்ச்சையும் இல்லாமல்தான் எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை துறக்க அவருக்கு அசாத்திய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். எங்கள் அணியின் பல கேப்டன்சி திறமையுள்ள வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணியின் வளர்ச்சிக்கு தேவை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments