Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவராஜ்சிங், ஹர்திக் பாண்ட்யா அபாரம்: பெங்களூரை வீழ்த்திய மும்பை!

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (07:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 7வது போட்டியான நேற்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில்  பந்துவீச முடிவு செய்ததால் மும்பை அணி களத்தில் இறங்கியது. மும்பை அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினாலும் யுவராஜ்சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர்களின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 48 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் குவித்தனர்,.
 
188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் அபாரமாக விளையாடி கடைசி வரை போராடினாலும், அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. முதல் பந்தில் சிக்ஸ் அடித்தாலும் அடுத்தடுத்த பந்துகளில் ரன் எடுக்க திணறியதால் இந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தததால் மும்பை அணி தோல்வி அடைந்தது.
 
மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்தது. கொல்கத்தா முதலிடத்திலும் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments