108 ரன்களுக்குள் சுருண்ட கொல்கத்தா! சிஎஸ்கே ஸ்பின்னர்கள் அபாரம்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (21:41 IST)
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்துள்ளது.
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் ஆண்ட்ரு ரஸல் இன்றும் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னொரு முனையில் விக்கெட்டுக்கள் விழுந்ததாலும், சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபார பந்துவீச்சாலும் ரஸால் கூட இன்று ரன்களை குவிக்க முடியவில்லை. இவ்வளவிற்கும் ரஸலுக்கு இரண்டு கேட்ச்சுகள் மிஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஸல் கடைசி வரை போராடி 50 ரன்கள் எடுத்து அணியையும் 100 ரன்கள் கடக்க உதவினார். 
 
சிஎஸ்கே தரப்பில் சஹார் 3 விக்கெட்டுக்களையும், ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 109 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments