Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்10 - யுவராஜ் சிங் விக்கெட்டால் எளிதில் வெற்றியடைந்த புனே

Webdunia
சனி, 6 மே 2017 (20:00 IST)
ஐபிஎல் 10வது சீசன் இன்று நடைப்பெற்ற முதல் ஆட்டத்தில் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.


 

 
ஐபிஎல் 10வது சீசன் லீக் போட்டியில் இன்று நடைப்பெற்ற முதல் ஆட்டத்தில் புனே, ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்திவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது.
 
அதிகப்பட்சமாக புனே அணியில் ஸ்டோக்ஸ் 25 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டை பறிகொடுத்தது. 
 
தொடக்க ஆட்டக்காரரான வார்னர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஆட்டத்தால் ஹைதராபாத் அணி வெற்றியை நோக்கி சென்றது. வார்னரை தொடர்ந்து யுவராஜ் சிங் வெளியேற ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே குவித்தது.
 
புனே அணி 12 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் புனே 18 புள்ளிகள் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments