நாளை துவங்கும் ஐபிஎல் 2017: சுவாரஸ்ய துளிகள்!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (12:16 IST)
டி20 கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் நாளை தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஹைதராபாத்தில் நாளை நடைபெற உள்ளன. 


 
 
# ஐபிஎல் டி20 தொடரின் 10-வது சீசன் நாளை தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 
# 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 
 
# சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
 
# நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 
 
# தொடக்க விழாக்கள் 8 நகரங்களில் நடத்தப்படுகின்றன. 
 
# நாளை ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், புனே நகரில் 6 ஆம் தேதியும், ராஜ்கோட்டில் 7 ஆம் தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8 ஆம் தேதியிலும், மும்பையில் 9 ஆம் தேதியும், கொல்கத்தாவில் 13 ஆம் தேதியுமம், டெல்லியில் 15 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

2வது திருமணத்தை உறுதி செய்த ஷிகர் தவான்.. அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிபவர் தான் மணமகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments