Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2017: பெங்களூர் வந்தார் டிவில்லியர்ஸ்! ரசிகர்கள் நிம்மதி

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (22:22 IST)
உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இன்று பெங்களூர் வந்தடைந்தார். இதனால் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.



 


ஐபிஎல் 2017 போட்டிகள் வரும் 5ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியில் காயம் காரணமாக பலர் விலகியுள்ள நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அவர்களும் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஏற்கனவே விராத்கோஹ்லி ஓரிரு போட்டியில் விளையாடாத நிலையில் டிவில்லியர்ஸ்ஸும் இல்லையென்றால் அணி பலவீனமாக கருதப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நான் பெங்களூரு வந்துவிட்டேன். மீண்டும் இங்கே வருவது சிறப்பானது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து டி வில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மீண்டும் பெங்களூரு வந்தது சிறப்பானது. ஐ.பி.எல். சீசன் 2017 தொடங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், come on @RCBTweets! #PlayBold’’ என்று பதிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments