Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான அரிசி முறுக்கு செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 8 கப்
வறுத்த புழுங்கல் அரிசி - 1 கப்
வறுத்த உளுந்து - 11/2 கப்
எண்ணெய் - 1/2 லிட்டர்
பேங்கிங் பட்டர் - 100 கிராம்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
வெள்ளை எள்ளு - 50 கிராம்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
வாணலியில் புழுங்கல் அரிசியை பொரியரிசியாய் வறுத்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் உளுந்தையும் போட்டு வறுத்து தனியாக வைக்கவும். பச்சரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பிறகு வடித்து, நிழலில் காயவைத்து, வறுத்த புழுங்கலரிசி மற்றும் உளுந்துடன் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.
 
அரைத்த மாவுடன் பட்டர், சூடு செய்த எண்ணெய் ஒரு குழிக்கரண்டி, உப்பு, பெருங்காயத்தூள், எள்ளு போட்டு தேவைக்கு  தண்ணீர் ஊற்றி பிசையவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும். அதேநேரம் முறுக்கு மாவினை முறுக்கு குழாயில் போட்டு சின்ன தட்டில் பிழிந்து கொள்ளவும். பிழிந்து வைத்துள்ள மாவினை சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான அரிசி  முறுக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments