Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? பெப்பர் இட்லி ட்ரை பண்ணுங்க!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (09:14 IST)
இட்லி தமிழர்களின் அன்றாட காலை உணவாக உள்ளது. தினம்தோறும் வெறும் இட்லியை செய்வதை விட விதவிதமான வகைகளில் இட்லி செய்தால் குழந்தைகளும் சாப்பிட விரும்புவஎ. சூப்பரான சுவையான பெப்பர் இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.


  • தேவையான பொருட்கள்: இட்லி, மிளகுத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
  • முதலில் இட்லியை சுட்டு எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகளை போட்டு லேசாக பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்.
  • பிறகு கடாயில் கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் இட்லித் துண்டுகளை போட்டு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்
  • கடைசியில் மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பெப்பர் இட்லி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments