முட்டை பணியாரம்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2015 (12:47 IST)
பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதேப்போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம்.


 


தேவையானப் பொருட்கள்

* இட்லி மாவு - ஒரு கப்
* முட்டை - 2
* சின்ன வெங்காயம் - 6
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடுகு - கால் தேக்கரண்டி
* உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

* வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும்

* ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை நன்றாக அடித்து கலக்கவும்

* பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தெவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

* வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

* பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.

* பின்னர் தாளித்த பொருட்களை முட்டை இட்லிமாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

* குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.

* பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும், இப்பொழுது சுவையான முட்டை பணியாரம் தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

Show comments