Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கில் போருக்கு காரணமான இரு ஆடு மேய்க்கும் சிறுவர்கள்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (17:52 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது கார்கில் போர். 
 
பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது. 
 
தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை நாடியது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கிற்கு கடும் கண்டம் தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது.
 
1999 ஆம் ஆண்டு ஜூலை 26ல் இந்தியா, கார்கில் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்டது. நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டிய போர் இந்திய ராணுவ வீரர்களின் தீரமான செயல்களால் இரண்டே மாதத்தில் முடிவடைந்தது. 
 
1999 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தின் ஒருநாள் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இருவர் மிகவும் பதட்டத்துடன் காவல்துறை தகவல் அலுவலகத்திற்கு ஓடி வந்து, நாங்கள் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் சில நபர்கள் பெரிய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

எங்களை பார்த்ததும் அவர்கள் எங்களை துரத்த ஆரம்பித்தார்கள். நாங்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவந்து விட்டோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த இடம் காஷ்மீரின் கார்கில். இதற்கு பிறகு தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கார்கில் போர் மூண்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments