கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள்

Webdunia
நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர ், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும ், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம்.

கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை :

1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்ச ி

2. கடுமை குறைவான கணைய அழற்ச ி

3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும்.

தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி :

பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கணைய நாளத்தை அடைகின்றன. அந்தப் பித்தக் கற்களின் கூர்முனை கணையத்தின் உட்பகுதியைக் குத்தினால் குருதி ஒழுகும். எனவே இதனைத் தீவிரக் குருதியொழுகும் கணைய அழற்சி என்கிறோம். பித்தக் கற்கள் கணைய நாளத்தை அடைத்திருக்கலாம் அல்லது கணைய நாளத்தினுள் நாக்குப்புழு உட்சென்று அடைத்துக் கொள்ளலாம். அல்லது குடற்புற சுருக்குத் தசையில் வலிப்பு ஏற்பட்டு கணைய அழற்சி உண்டாகலாம். நோயணு நிறைந்த பித்த நீர் கணையத்தை தூண்டிக் கணைய நொதியங்களை கூடுதலாகச் சுரக்கச் செய்கிறது. பித்தக் கற்கள் உராய்வினாலும ், பித்த நீர் செறிவின் காரணமாகவும் தோன்றிய குருதியொழுக்கின ை, கூடுதலாகச் சுரந்த கணைய நொதியங்கள ், தானே சீரணித்து விடுகின்றன. இந்த நொதியங்கள் கணையத்தில் உண்டாகும் கொழுப்புச் சிதைவுகளையும் சீரணித்து விடுகின்றன.

நோய்க்குறிகள் :

1. கடுமையான வயிற்று வலி தோன்றும். அதன் கடுமை தாளாது நோயாளர் அதிர்ச்சியுற்று மயக்கமடைவார்.

2. நாட ி, விரைவு நாடியாகவும் இழையோடும் நாடியாகவும் இருக்கும்.

3. குருதியழுத்தம் குறையும். கால ், க ை, முகம் முதலியவை சில்லிட்டு வியர்த்திருக்கும். உதடுகள் நீலித்து இருக்கும்.

4. திடீரென்று நோயாளரின் நினைவு குன்றும்.

5. வாந்தி கடுமையாகவும ், தொடர்ந்தும் இருக்கும். வாய்வழியாக உள்ளுக்குள் எது சென்றாலும் சென்ற மறு நிமிடமே வாந்தியாகிவிடும். இந்த அறிகுறிதான் நோயாளரையும் மருத்துவரையும் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.

6. பிறகு வயிற்றின் மேற்புற தோலில் நீலநிறத் திட்டுக்கள் தோன்றும்.

7. வயிற்றுத் தசைகள் இறுதிக் கடினமாகத் தோன்றும். ஆனால் அடிவயிறு இளக்கமாக இருக்கும்.

8. குடலின் அலைவு இயக்கம் தானே குறையும்.

கடுமை குறைவான கணைய அழற்சி :

கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகள் அத்தனையும் இதற்கும் உண்டு. ஆனால் நோய்க்குறிகளின் கடுமை குறைவாகவும ், மெதுவாகவும் தோன்றும். மயக்கம் ஏற்படாது. கடுமையான காய்ச்சல் தோன்றும். இரைப்பையின் மேல்புறம் மென்மையுற்றிருக்கும். இந்நிலை பித்தப்பையழற்சியைப் போன்று தோன்றலாம். இந்த நோயைக் கண்டுபிடிக்க சிறுநீரைச் சோதித்து சர்க்கரையின் அளவு கூடுதலாகவும் நொதியங்கள் கூடுதலாகவும் வெளியேறுவதைக் கண்டு உறுதி செய்து கொள்ளலாம்.

நாட்பட்ட கணைய அழற்சி :

நாட்பட்ட கணைய அழற்சி என்பத ு, திசுக்கள் அழிவுபட்ட ு, புதிய நார்த் திசுக்கள் வளர்ந்து அவைகளில் சுண்ணாம்புப் படிவுகள் தோன்றி கணையம் தன்னுடைய இயல்புத் தன்மையை இழந்து இருக்கும் நிலையாகும். இதனால் கணையம் இறுக்க முற்றுச் சுருங்கியிருக்கும். கணைய நாளங்கள் அகண்டு இருக்கும். முடிவில் கணையத்தின் அகச்சுரப்பு மற்றும் புறச்சுரப்புப் பணிகளில் கோளாறு ஏற்படுகிறது.

காரணங்கள் :

கணைய அழற்சிக்கு நிச்சயமான ஒரே காரணம் எது என்று தீர்மானிக்க இயலவில்லை. எனினும ், குடிக்கும் பழக்கம் கணைய அழற்சிக்கு காரணமாக அமைகின்றது. தொடர்ந்து புரதக் குறைவான உணவை மட்டுமே உண்பவர்களுக்கு இந்நோய் தோன்றுகிறது.

நோய்க்குறிகள் :

1. நிறைய உணவு அல்லது மது அருந்திய பின்பு திடீரென்று வயிற்றில் தாங்க இயலாத கடுமையான வலி உண்டாகும். இவ்வலி 24 முதல் 48 மணிநேரம் வரை நீடிக்கும்.

2. தரையில் முதுகு படுமாறு வைத்துப் படுத்துக் கொண்டால் வலி சற்றுக் குறையும். வயிற்றின் எல்லா பகுதிக்கும் வலி பரவும். சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுக்கும் கூட வலி பரவும்.

3. வலியுடன் சேர்ந்து பேதியாகலாம். மலம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும்.

4. நின்று கொண்ட ு, முன்புறம் சாய்த்து இரண்டு கைகளையும் முட்டிக்கால் மீது வைத்துக் கொண்டு வாந்தி எடுப்பார்கள். வாந்தி எடுக்கும்போது உண்டாகும் வலியைச் சமாளிக்க இந்த நிலையை நாடுவர்.

5. வயிறு மென்மையாக இருக்கும்.

6. மலம் வெளுத்திருக்கும். நீரில் சர்க்கரை கலந்து சிறுநீராக வெளியேறும்.

மருத்துவம் :

பொது :- கொழுப்பு இல்லாத உணவாகக் கொடுக்க வேண்டும். அதிகம் நீருள் ள, குழைந்த அல்லது கடைந்த உணவாகக் கொடுக்க வேண்டும். ஆட ை, நீக்கிய பால ், புலால ், ரசம் மீன ், ரொட்ட ி, பழங்கள ், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

மருந்து :

1. ஐரிஸ்வெர்சிகோலர் :- கணையப் பகுதியில் கடுமையான வலியும ், இனிப்பான வாந்தியும் உண்டானால் இம்மருந்து ஏற்றது. சீரணமாகாத உணவ ு, நோயினால் ஏற்படும் தலைவல ி, வாய் நீரூறல ், நாவில் எண்ணெய்ப் பசை ஆகியவை தோன்றும் குறிகளுடன் கூடிய நாட்பட்ட கணைய அழற்சிக்கு ஏற்ற மருந்து இது.

2. அயோடின் :- நாவில் கசப்பு சுவையுடன் எச்சில் ஊறும். வயிற்றின் இடது மேற்புறத்தில் கொடுமையான வலி இருக்கும். முதுகிலும் வலி இருக்கும். கொழுப்பு கலந் த, நுழைத்த மலம் பெருமளவு பேதியாகும்.

3. பாஸ்பரஸ் :- மலம் சவ்வரிசி போ ல, கொழ கொழப்பாகவும ், எண்ணெய் கலந்தும் போகும். செரியாத உணவு பேதியாகும். இதயம ், கல்லீரல் மற்றும் சிறுநீரக கொழுப்புச் சிதைவு நோயிலும் மலத்தில் கொழுப்புத் திசுக்கள் வெளியேறும். மலம் வெளுத்து இருக்கும். நோயாளர் குருதி சோகையுற்றிருப்பார். இந்த நிலைக்கு இம்மருந்து ஏற்றது.

4. பெல்லடோனா :- குருதி கசியும் கணைய அழற்சியில் இம்மருந்து வலியைக் குறைக்கிறது. கசிவுறும் குருதியை உறைய வைக்கிறது. இம்மருந்தைத் தொடர்ந்து மெர்க்கூரியஸ் என்ற மருந்தையும் கொடுக்க வேண்டும். திடீர் நோய ், திடீர் வல ி, திடீர் குருதிப் பெருக்கம் என்ற நோய் நிலைகளுக்கும ், பூந்தசையழற்சிக்கும் பெல்லடோனா மிகவும் ஏற்றது.

5. அட்ரோபைன் சல்பேட் :- இதுவும் கணைய நாளத்தைச் சுருங்கச் செய்து கணையக் குருதிப் பெருக்கத்தைத் தடுக்கிறது. இதைத் தவிர "பான் கிரியாட்டினம்" என்ற மருந்தும ், " கல்கேரிணயா பாஸ்" என்ற மருந்தும் நல்ல குணத்தையளிக்கின்றன.

நன்றி : டாக்டர் ச. சம்பத்குமார ்
மருத்துவ அறிவியல் மலர ்
செப். 2002 மாத இதழ ்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments