Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை!!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:40 IST)
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும். முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம். 
 
முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும். 
 
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின்  வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
 
முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும். முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது. 
 
பிரசவம் முடிந்த பெண்கள் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க, முருங்கைக்கீரையை சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். ஆகவே பிரசவத்திற்கு பின் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்க வேண்டுமானால்,  முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும். 
 
குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர வைத்து, பொடி செய்து, பின் அந்த பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். இதனால் கண்கள் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். 
 
முருங்கைக்கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மை அதிகரிப்பதுடன், விந்தணுவானது கெட்டிப்படும். வாரம் இரண்டு முறை முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலம் சீராக செயல்பட்டு, சிறுநீர் அதிகமாக வெளியேறி, உடலில் தங்கியுள்ள நச்சுக்கள்  வெளியேறிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments