Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்கள் தீர இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (00:00 IST)
சுளுக்கு வலி தீர: புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால்  சுளுக்கு வலி குணமாகும்.
 
கண் எரிச்சல் தீர: நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.
 
ரத்தக்கொதிப்பு குணமாக: நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
 
தொண்டைக் கட்டு நீங்க: சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.
 
நரம்பு பலம் பெற: சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
 
முடி நன்கு வளர: காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.
 
வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்.
 
வயிற்றுப்புண் தீர: வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
 
வயிற்றுவலி குணமாக: அகத்திக்கீரையை நன்கு வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.
 
இடுப்புவலி தீர: வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.
 
உடல் பருமன் குறைய: பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments