Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்

மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்

Webdunia
நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.


 
 
ஒரு சிறு கரண்டியில் சிறிது தேனை எடுத்துக்கொள்ளவும். தேனின் அளவைவிட இரண்டு மடங்கு மிதமான சூடுநீரில் சிறிது கிராம்புத்தூளையும் கலந்து கால் முட்டியில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். சில நிமிடங்களில் வலி நின்றுவிடும். அதோடு நீண்ட நாள் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
 
* சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.
 
* கேரட்டை மிக்ஸியில் சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும். இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால், பித்தம் குறையும்.
           
* மாதுளம்பழ ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும். 1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1 ஸ்பூன் தேன் கொடுத்தால் பசி எடுக்கும்.
 
* இரண்டு ஸ்பூன் தேனோடு, மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயூடன் கலந்து குடித்தால், கொலெஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும். நீண்ட நாள் கொலெஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் மூன்று முறை இதேபோல் குடித்தால் குணம் கிடைக்கும்.
 
* இரவில் சிறு நீர் போகும் குழந்தைகளுக்கு குழந்தை தூங்கும் முன்பு ஒரு ஸூபூன் தேன் கொடுத்தால் சில நாட்களில் சரியாகும்.
 
* தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
 
* அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.
 
* ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
 
* ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சூடான சுவையான இளநீர் ரசம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்..!

கர்ப்பிணி பெண்களுக்கு கால் வலி வராமல் இருக்க..! இந்த வகை காலணிகளை ட்ரை பண்ணி பாருங்க..!

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments