Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை சீராக்கும் சுக்கின் பயன்கள்

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (23:42 IST)
ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரைச் சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர வாயு அகலும் பசியுண்டாகும்.
 
தலை நோய், சீதளம், வாத குன்மம், விலாக்குத்து, வயிற்றுக்குத்து, நீர்ப்பீனிசம், நீர் ஏற்றம், நீர்க்கோவை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல்வலி, காதுக் குத்தல், சுவாச ரோகம் தீரும்.
 
* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை ஐந்தும் போட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
 
* சுக்கு 10 கிராம், மிளகு 6, சீரகம் 35, பூண்டுப்பல் 3, ஓமம் 10, உப்பு 4 கல் ஓட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
 
* சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி தீரும்.
 
* சுக்கு, கடுக்காய்ப்பிஞ்சு, சூரத்து ஆவாரை வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, 10 கிராம் பேதி உப்பு கலந்து சாப்பிட ஆயாசமின்றி பேதியாகும். மோர் சாப்பிடப் பேதி நின்று விடும்.
 
* பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
 
* சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தோல், இந்துப்பு ஆகியவற்றை சமமான அளவு பொடி செய்து பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும்.
 
* சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
 
* சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
 
* சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

தொடர்புடைய செய்திகள்

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments