Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதரண தேங்காய் எண்ணெய்யில் இத்தனை நன்மைகள் உள்ளதா....?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (23:42 IST)
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.
 
* சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.
 
 
* சமைக்கவும் அதன் இனிய மணத்துக்காகவும் மட்டுமே உபயோகிக்கிறோம். ஆதலால், எளிதாக கிடைக்கும் இந்த எண்ணெய்யின் மூலம் எண்ணற்ற பயன்களை  பெறமுடியும்.
 
 
* தேங்காய் எண்ணெய் இரண்டு மடங்கு ஒரு ‘மாய்ஸரஸர்’ ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும், தேங்காய் எண்ணெய்யைத் தடவி பயனடையலாம்.
 
* தேங்காய் எண்ணெய் ஷேவிங் க்ரீமாகவும் பயன்படும். முகத்தில் தடவி, லேசாக மசாஜ் செய்தபின் உங்கள் ரேஸரை உபயோகிக்கலாம். முகத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கமுடியும்.
 
* தேங்காய் எண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடான டீயில் கலந்து ஒரே மடங்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும். மேலும் மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தடவினால், மூக்கடைப்பு நீங்கும்.
 
* பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின்மீது தடவினால், சிறிது  நாட்களிலேயே பற்கள் மின்னுவதை பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் கலந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments