குடந்தை காசி விசுவநாதர் கோயில்

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2010 (13:30 IST)
கும்பகோணம் மகாமகக் குளத்தின் வட கரையில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் கோயில்.

K. AYYANATHAN
இராவணனை அழிப்பதற்காக ஸ்ரீ இராமர் உருத்திராட்சம் பெற விரும்பினார். அதனால் அகத்திய முனிவரை அடைந்து தன் விருப்பத்தை வெளியிட்டார். அகத்திய முனிவர் கும்பகோணம் சென்று சில நாட்கள் தங்கியிருந்து காசி விசுவேசுவரரைத் துதித்து வந்தால் உருத்திராட்சம் பெறலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

அகத்திய முனிவரின் ஆலோசனைக் கிணங்க விசுவேசுவரரை வணங்கிய ஸ்ரீ இராமர் தனது உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதனால் இந்த இடம் காரோணம் என்று பெயர் பெற்றதாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ இராமர், சிவலிங்கமாய் வீற்றிருந்த விசுவேசுவரரை வணங்கிய லிங்கம் இன்றும் (சற்றுச் சாய்ந்த நிலையில்) உள்ளது. இது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.
K. AYYANATHAN

இத்திருத்தலத்தில் இறைவன் சிவலிங்க மேனியாயும், தேவி தெற்கு முகமாக நின்றும் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலுள்ள நவ கன்னிகையர் சந்நிதியும் சிறப்புப் பெற்றதாகும்.

K. AYYANATHAN
ஒரு சமயம் கங்கை, யமுனை முதலான நவ கன்னியர்கள் தங்களிடம் வந்து மூழ்குபவர் பாவம் தாங்கக் கூடவில்லை எனவும், அவற்றை போக்கியருட வேண்டுமென்றும் இறைவனிடம் வேண்டியதாகவும், சிவபெருமான் அருள்கொண்டு அக்கனியரை அழைத்து மகாமகக் குளத்தில் மூழ்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள வழி செய்தார் என்று்ம திருத்தலப் புராணம் கூறுகிறது. அந்த நவகன்னியர் சந்நிதியும் தென்முகமாக உள்ளது.

நவ கன்னியரை வணங்கி பல பெண்கள் தங்கள் மீதான பாவங்களை போக்கிக் கொள்வர் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியானத்தில் ஆழ்ந்து செல்வது எப்படி? குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்!

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

Show comments