Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - 1800 கோடிகளை நெருங்கும் சூப்பர் ஹீரோ படம்

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2014 (13:38 IST)
5. The November Man
பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 4.3 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் யுஎஸ் வசூல் 18 மில்லியன் டாலர்கள்.

4. If I Stay
விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஆர்.ஜே.கர்ட்லரின் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 5.6 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல் 39.5 மில்லியன் டாலர்கள்.

3. Let's Be Cops
லுnக் க்ரீன்பீல்ட் இயக்கியுள்ள இந்த காமெடிப் படம் சென்ற வார இறுதியில் - இஃப் இட் ஸ்டே படத்தைப் போல 5.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 66.8 மில்லியன் டாலர்கள்.

2. Teenage Mutant Ninja Turtles
இந்த வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட்களில் ஒன்று. சென்ற வார இறுதியில் 6.5 மில்லியன் டாலர்களை தனதாக்கிய படம் இதுவரை யுஎஸ்ஸில் 174.7 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது

1. Guardians of the Galaxy 
இந்த சூப்பர் ஹீரோ படம் ஆறு வாரங்களில் ஒருமுறைதான் முதலிடத்தை தவறவிட்டது. சென்ற வார இறுதியில் 10.4 மில்லியன் டாலர்களை வசூலித்த படம், ஆறு வாரங்கள் முடிவில் 294.8 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இந்த வாரம் இப்படம் 300 மில்லியன் டாலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது தோராயமாக 1800 கோடிகள்.

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

Show comments