Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - கலெக்ஷனில் கலக்கும் காணாமல் போன மனைவி

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2014 (14:41 IST)
5. The Maze Runner
சென்ற மாதம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் படம் பாதி கிணறுதான் தாண்டியுள்ளது. சென்ற வார இறுதியில் 11.63 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 73.56 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது.

4. The Boxtrolls
சென்ற வாரம் வெளியான இந்த அனிமேஷன் படம் முதல் மூன்று தினங்களில் 11.98 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3. The Equalizer
சென்ற வாரம் டென்சல் வாஷிங்டன்னின் இந்தப் படம் 18.75 மில்லியன் டாலர்களுடன் இந்த வாரம் 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இது முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 64.24 மில்லியன் டாலர்கள்.

2. Annabelle
சென்ற வாரம் வெளியான இந்த ஹாரர் திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 37.13 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

1. Gone Girl
டேவிட் ஃபின்சர் இயக்கியிருக்கும் படம். அவர் இதுவரை இயக்கிய எந்தப் படமும் சோடை போனதில்லை. இதுவும் அப்படியே. ஐந்தாவது வருட திருமண நாளில் தனது மனைவி காணவில்லை என்று ஒருவன் புகார் செய்கிறான். அவள் எப்படி காணாமல் போனாள், யார் காரணம் என்று சுற்றிச்சுழலும் இந்த த்ரில்லர் டேவிட் ஃபின்சரின் கைவண்ணத்தில் மறக்க முடியாத காவியமாகியிருக்கிறது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 37.51 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!