Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - ட்ராகுலாவுக்கு இரண்டாவது இடம்

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2014 (14:59 IST)
5. The Judge
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 13.12 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. டேவிட் டோப்கின் படத்தை இயக்கியுள்ளார்.
 

4. Annabelle
த கான்ஜுரிங் திரைப்படத்தின் முதல் பாகம் போல் உருவாகியிருக்கும் இந்த ஹாரர் திரைப்படம் சென்ற வார இறுதியில் 15.86 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 61.65 மில்லியன் டாலர்கள். விமர்சகர்கள் படத்தை கழுவி ஊற்றினாலும் 6.5 மில்லியன் டாலர்களில் உருவான படம் அதைப்போல பத்து மடங்கை பத்தே தினங்களில் வசூலித்துள்ளது.
 

3. Alexander and the Terrible, Horrible, No Good, Very Bad Day
பெயரைப் பார்த்தால் சரித்திரப் படம் போலத் தோன்றினாலும் இது சரித்திரப் படமல்ல. நிகழ்கால காமெடி திரைப்படம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 18.36 மில்லியன் டாலர்களை வசூலித்து 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது.
 

2. Dracula Untold
ட்ராகுலாவை வைத்து எடுக்கப்பட்ட பல படங்களில் இதுவும் ஒன்று. விமர்சகர்கள் படத்தில் காட்டப்படும் சரித்திரப் பின்னணியை வைத்து படத்தை விமர்சித்தாலும் பலருக்கு படம் பிடித்தே உள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 23.51 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 

1. Gone Girl  
டேவிட் ஃபின்சாரின் இந்த த்ரில்லர் சென்ற வாரம் இருந்த அதே முதலிடத்தை இந்த வாரமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 26.41 மில்லியன் டாலர்கள். முதல் பத்து தினங்களில் யுஎஸ் வசூல் 77.89 மில்லியன் டாலர்கள்.



 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments