Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை அழிப்பேன் என பலர் கிளம்பியுள்ளனர். விஜய்யை மறைமுகமாக தாக்கிய உதயநிதி..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (13:11 IST)
திமுகவை அழிப்பேன் என பலர் கிளம்பி உள்ளனர் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், இந்த கட்சியின் மாநாடு சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் அவர் பேசியபோது திராவிட மாடல் ஆட்சி குறித்தும், ஒரு குடும்பமே கொள்ளை அடித்து வருவது குறித்தும் திமுகவை மறைமுகமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் விஜய்யை விமர்சனம் செய்தனர். முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் கூட மறைமுகமாக விஜய் மீது விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திமுகவை அழிப்பேன் என பலர் கிளம்பி இருக்கிறார்கள். நம்முடைய தொடர் வெற்றி தான் எதிரணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என காத்திருக்கிறார்கள். 2026 இல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து, இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்," என்று தெரிவித்தார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments