Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 கோடி பேர் பார்த்த ஹாலிவுட்பட ட்ரெய்லர்

Webdunia
புதன், 6 மே 2015 (16:00 IST)
1980-களில் ஹாலிவுட்டையே புரட்டிப் போட்ட திரைப்படம் ஸ்டார் வார்ஸ். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றுள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் 6 பாகங்கள் இது வரை வெளியாகியுள்ளன. 
 
தற்போது, ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ் என்ற பெயரில் 7-வது பாகம் தயாராகி வருகிறது. ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. வேற்று கிரகம் என்ற ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாகத்திலும் ஸ்டார் வார்ஸ் போகும் உயரம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.
’அவெஞ்சர்ஸ்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் ஓய்ந்த நிலையில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தனது ’ஸ்டார் வார்ஸ்’ படத்தின் மீது கவனத்தை செலுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார் வார்ஸ் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளது.
 
இது குறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர் கூறுகையில் “ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தின் 2-வது டீசரை இதுவரை 200 மில்லியன் பேர் (20 கோடி) பார்த்தனர். சமீபத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லரை வெளியான 24 மணி நேரத்திற்குள் 88 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்களின் அமோகமான ஆதரவுக்கு நன்றி” என்றார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments