அன்னபெல்லா 3ம் பாகத்தில் இணைந்த பாட்ரிக் வில்சன்- வேரா பார்மிகா ஜோடி

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (10:50 IST)
உலக அளவில் பெரும் புகழ்பெற்ற  திகில் படமான அன்னபெல்லின்  மூன்றாவது பாகத்தில் பிரபல நட்சத்திரங்களான பாட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா மீண்டும் இணைந்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் படம் தான்  தி கான்ஜூரிங். இந்த வரிசையில் கான்ஜூரிங் 2, அன்னபெல், அன்னபெல் கிரியேசன், தி நன் எனும் திரைப்படங்கள் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தன.
 
 
இந்நிலையில் அன்னபெல் மூன்றாவது பாகம் வர உள்ளது. ஜேம்ஸ் வான் மற்றும் பீட்டர் சாப்ரான் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் பிரபல  ரீல் ஜோடிகளாக கருதப்படும் பார்ரிக் மற்றும் வேரா இந்த பாகத்திலும் இணைந்துள்ளனர். மேலும் 'ஜூமான்ஜி' பட புகழ் மாடிசன் ஐஸ்மேன் புதிய இணைப்பாக இணைந்துள்ளார். 
 
இந்த கான்ஜூரிங் படத்தின் கதை  எட் வாரன், லொரைன் வாரன் என்ற தம்பியரைச்  சுற்றி தான் இருக்கும். இந்த கதாபாத்திரங்களில் பேய் ஓட்டும் தம்பதியாக பாட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா நடித்தனர்.
 
படத்தில் இவர்களுக்கு  ஜூடி என்ற  10 வயது மகள் இருப்பார். இச்சிறுமியை குறிவைக்கும்  தீய சக்தி கொண்ட அன்னபெல் பொம்மையை சுற்றி தான் கதை இருக்கும்.
 
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

அடுத்த கட்டுரையில்
Show comments