ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் 1993ல் மிசஸ் டவுட்ஃபயர் வெளியானது. அப்பா அம்மா வேஷம் போட்ட கதை. கமலின் அவ்வை சண்முகியின் ஒரிஜினல் என்றால் புரிந்து கொள்வது எளிது. கிரிஸ் கொலம்பஸ் இயக்கிய இப்படம் அன்று உலக அளவில் செம ஹிட்.
யுஎஸ்ஸில் மட்டும் இப்படம் 219 மில்லியன் டாலர்களை வசூலித்தது. யுஎஸ்ஸுக்கு வெளியே 222 மில்லியன் டாலர்கள்.
குறைந்த பட்ஜெட்டில் இப்படியொரு இமாலய வசூல் கிடைத்தும் மிசஸ் டவுட்ஃபயரின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்கள் எடுக்காமலிருந்தது உலகமகா ஆச்சரியம். கடந்த வருடங்களில் இரண்டாம் பாகத்தை எடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் திரைக்கதை அளவிலேயே அந்த முயற்சிகள் அனைத்தும் கைவிடப்பட்டன.
இறுதியாக இப்போது David Berenbaum மிசஸ் டவுட்ஃபயரின் சீக்வெலுக்கான ஸ்கிரிப்டை எழுத ஆரம்பித்துள்ளார். ராபின் வில்லியம்ஸ் நடிக்க கிரிஸ் கொலம்பஸே இந்த சீக்வெலையும் இயக்குவார் என தெரிகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் சார்... அவ்வை சண்முகி சீக்வெல் வருமா?