பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு!

vinoth
புதன், 29 மே 2024 (11:54 IST)
கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு க்ரீத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து பிரதீப் அடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தைய சென்சேஷனல் நடிகை மமிதா பைஜு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments