Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 ஆம் ஆண்டுக்கான ஆண்டு கோல்டன் க்ளோப் விருதுப்பட்டியல்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (15:28 IST)
வருடாவருடம் ஹாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்குப் பல பிரிவுகளின் கீழ் கோல்டன் க்ளோப் விருது வழங்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டு வெளியானப் படங்களுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கருக்கு இணையானது கோல்டன் க்ளோப் விருதுகள். இந்த விருதுகள் தொடர்ந்து 75 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன, 2018 ஆம் ஆண்டு ரிலிசான படங்களுக்கான 76 வது கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நடைபெற்றது.

கோல்டன் க்ளோப் விருது  பெறும் படங்கள் மற்றும் கலைஞர்களே பெரும்பாலும் ஆஸ்கர் விருதுகளையும் பெறுவர் என்பதால் இந்த விருதுகள் ஆஸ்கருக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகின்றன.ஏ ஆர் ரஹ்மானுக்குக் கூட முதலில் கோல்டன் க்ளோப் விருது கிடைத்த பின்னரே ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் ஆஸ்கர் விழாவில் பரிசுப் பெறப்போகும் படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலில் கோல்டன் க்ளோப் விருது பெற்றவர்களின் பெயர்கள் அதிகள்வில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

விருது வென்றவர்கள் விவரம் :-
சிறந்த படம் – பொஹீமியன் ராப்சடி
சிறந்த படம் (இசை அல்லது நகைச்சுவை) – கிரீன் புக்
சிறந்த நடிகர் – ரமி மலெக் (பொஹீமியன் ராப்சடி)
சிறந்த நடிகை – க்ளென் க்ளோஸ் (தி வைஃப் )
சிறந்த நடிகர் (இசை அல்லது நகைச்சுவை) – கிறிஸ்டியன் பெல் (வைஸ்)
சிறந்த நடிகை (இசை அல்லது நகைச்சுவை) – ஒலிவியா கோல்மன் ( தி ஃ பேவரட்)
சிறந்த துணை நடிகர் – மஹர்ஷால அலி (கிரீன் புக்)
சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் ( இஃப் பெலே ஸ்ட்ரீட் குட் டாக்)
சிறந்த இயக்குநர் – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த திரைக்கதை – கிரீன் புக்
சிறந்த அனிமேஷன் – ஸ்பைடர்மேன் (இண்டூ தி ஸ்பைடர் – வெர்ஸ்)
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் – ரோமா
சிறந்த இசை – பஃஸ்ட் மேன் (ஜஸ்டின் ஹர்விட்ஸ் )
சிறந்த பாடல் – ஷாலோ, எ ஸ்டார் இஸ் பார்ன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments