Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசப்பிலும் ஓர் இனிப்பு, ஒரு வாரத்துக்கு முன்னால் வெளியாகும் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2014 (12:43 IST)
நடிகர் பால் வால்கர் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast and Furious) சீரிஸின் 7 -வது பாகத்தில் நடித்துக் கொண்டிருந்தவேளையில்தான் தனது நண்பருடன் கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவர் இறந்தபோது எடுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை.
 
இந்த கோடையில் திரைக்கு வருவதாக இருந்த படம் சென்ற வருடம் நவம்பரில் பால் வால்கர் (Paul Walker ) மரணமடைந்ததைத் தொடர்ந்து 2015 ஏப்ரல் 10 -ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. பால் வால்கரின் மரணமும், படம் ஒரு வருடம் தள்ளிப் போனதும் ஈடுசெய்யமுடியாத இழப்பு.
இந்நிலையில் படத்தை தயாரித்து வரும் யூனிவர்சல் பிக்சர்ஸ் ஏப்ரல் 10 -க்குப் பதிலாக ஏப்ரல் 3- ம் தேதியே படத்தை வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. ஒருவாரம் முன்னதாக படம் வெளியாவது பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.
 
இந்தப் படத்தில் வழக்கம் போல வின் டீலும், பால் வால்கரும் இருக்கிறார்கள். பால் வால்கர் இறந்தாலும் படத்தில் அவரை சாகடிக்கவில்லை என படத்தை இயக்கியிருக்கும் ஜேம்ஸ் வான் (James Wan) கூறியுள்ளார். சென்ற வருடம் பட்டையை கிளப்பிய ஹாரர் படம் த கான்ஜுரிங்கை இயக்கியவர் ஜேம்ஸ் வான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏழாவது பாகத்தில் பால் வால்கர், விக் டீசல், ட்வைனி ஜான்சன் ஆகியோருடன் ஹர்ட் ரஸல், ஜேஸன் ஸ்டெதம் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments