Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ் மென் புதிய படம், கொடூரமான வில்லன் தயார்

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2014 (17:28 IST)
சூப்பர்ஹீரோ படங்களில் கவனிக்க வேண்டிய விஷயம் வில்லன்கள். ஒவ்வொரு படத்திலும் ஹீரோ ஒருவரே. மாறுவது வில்லன்களும் அவர்கள் உருவாக்கும் பிரச்சனைகளும். ஹீரோவைவிட வில்லன்கள் சரியாக அமைய வேண்டும் என்பதே சூப்பர்ஹீரோ படங்களின் முதல் விதி மற்றும் வெற்றி சூத்திரம். எக்ஸ் மென் சீரிஸும் இதற்கு விலக்கல்ல.
சமீபத்தில் வெளியான எக்ஸ் மென் - டேய்ஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. எக்ஸ் மென் சீரிஸில் அடுத்தப் படம் எக்ஸ் மென் - அபோகலிப்ஸ். இதன் கதை 1983-ல் நடப்பதாக ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதையை எழுதி படத்தை இயக்கப் போகிறவர் சைமன் கின்பெர்க்.
 
இந்த புதிய படம் எக்ஸ் மென் பர்ஸ்ட் கிளாஸின் சீக்வெலாக இருக்கும். படத்தில் வரும் மியூட்டன்ட்களுக்கு மேக்னெட்டோ, புரபசர் எக்ஸ் என்று இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு படுபயங்கர தலைவரை காட்டயிருக்கிறார்கள். அவர்தான் இந்தப் புதிய படத்தின் வில்லன். இதுவரை எக்ஸ் மென் சீரிஸில் காட்டப்பட்ட வில்லன்கள் அனைவரையும்விட இந்த புதிய வில்லன் படுபயங்கரமானவராம்.
 
2016 மே 27 படத்தை வெளியிடுகின்றனர். ரசிகர்களுக்குப் பிடித்தமான வால்வரைன் ஹ்யூக் ஜாக்மெனும் இதில் நடிக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments