Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத பலன்களை தரும் சோமவார விரதத்தை எப்போது மேற்கொள்வது...?

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:29 IST)
சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.


சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உபவாசம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். ரொம்பவே எளிமையான விரதமுறை தான் இது. ஆனால் பலனை பார்த்தால் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும்.

சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம்.

நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். அன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது. அன்றைய தினம் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(06.01.2025)!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

இந்த ராசிக்காரர்களுக்கு வந்து சேர வேண்டிய கடன்கள் வசூலாகும்! – இன்றைய ராசி பலன்கள்(04.01.2025)!

350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து, லாபம் கூடும்! – இன்றைய ராசி பலன்கள்(03.01.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments