Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளக்கேற்றுவதற்கு என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்....? என்னென்ன பலன்கள் கிடைக்கும் ?

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (16:12 IST)
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காயவைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவிகள் நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும். 
பஞ்சுத்திரி: பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம்,  வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல  பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
 
வெள்ளைத்துணி திரி: வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு  பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
 
சிவப்பு வர்ணத் துணி திரி: சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால்  திருமண தடை நீங்கும் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும். 
 
மஞ்சள் துணியாலான திரி: இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த  வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும்,  செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும்  பயன்படும் திரி எனலாம்.
 
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி: வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!

2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi

2025 New Year Horoscope: 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்? எப்போது வழிபட வேண்டும்?

ஐயப்ப விரதம் மேற்கொள்பவர்கள் அனுதினம் சொல்ல வேண்டிய மந்திரம்! Ayyappa Mandhiram

அடுத்த கட்டுரையில்