Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வராஹி தேவியின் திருநாமங்களின் சிறப்புக்கள் என்ன...?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (11:05 IST)
பெண் தெய்வங்கள் அனைத்துமே சக்தி மிக்க தெய்வங்கள்தான். இதில் குறிப்பிடத் தக்க தெய்வமாக, மகா சக்தியாக போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. சப்தமாதர்களில் வராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை.


வராஹி தேவியின் 12 திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் வளர்பிறை பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய, சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி.

வராஹி தேவியின் திருநாமங்கள்: 1. பஞ்சமீ, 2. தண்டநாதேஸ்வரி, 3. ஸங்கேதா, 4. ஸமயேஸ்வரி,  5. ஸமயஸங்கேதா, 6. வாராஹி,   7. போத்ரிணி, 8. சிவா, 9.வார்த்தாளி, 10. மஹாசேனா, 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12. அரிக்னி.

ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்யவேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது.

பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீய சக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வாராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது. மாதந்தோறும் வளர்பிறைதான் வராஹி வழிபாட்டுக்கு உகந்த அற்புத நாள். கோலம் போடுவது என்பது அம்பிகையை ஆத்மார்த்தமாக வரவேற்கும் வடிவம்.

லக்ஷ்மியின் வருகைதினமும் நிகழ வேண்டும் அனைவரது வீட்டில் வாசம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் கோலமிடச் சொல்கிறது சாஸ்திரம். கோலமிட்ட வீட்டில் அம்பிகை மிகுந்த கனிவுடன் சுபிட்சத்தை வழங்க எழுந்தருள்கிறாள் என்பது ஐதீகம்.     

ஒவ்வொரு  தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியிலும் வராஹி தேவியை மனதார வழிபட்டு, வீட்டில் விளக்கேற்றுங்கள். தேவியின் திருநாமங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி பாட வேண்டிய 108 ஐயப்ப சரணம் ஸ்லோகங்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல், நேர விரயம் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(27.11.2024)!

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!

2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi

அடுத்த கட்டுரையில்
Show comments