Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட வரங்களை அள்ளித்தரும் வாராஹி வழிபாடு !!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:36 IST)
பஞ்சமி திதி நாளில், வராஹிதேவியை  வழிபடுவதால், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள்.


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினத்தில் தேய்பிறை பஞ்சமி திதி அனுஷ்டிக்கபடுகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்வாள் வாராஹி.

அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு. நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

மேலும் படிக்க:வராஹி தேவிக்கு உரிய ஆஷாட நவராத்திரி !!

பஞ்சமி திதி நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறையில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம். வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம்.

பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை, வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்திய மாக வைத்து வழிபடுவது  சிறப்பான பலன்களை தரும்.

மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம். இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி.

Edited by Sasikala
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | January 2025 Monthly Horoscope Kanni

இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பிரச்சினை நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(30.12.2024)!

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | January 2025 Monthly Horoscope Simmam

இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் நீங்கி நன்மை உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(29.12.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments