இன்று ஐப்பசி பெளர்ணமி: சிவனுக்கு அன்னாபிஷேகம்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (07:20 IST)
இன்று ஐப்பசி பெளர்ணமி: சிவனுக்கு அன்னாபிஷேகம்!
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி விசேஷம் என்றாலும் ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமி கூடுதல் விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி மாதத்தில் வரும் இந்த பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்
 
அதேபோல் இன்று அன்னாபிஷேகம் செய்து அன்னபூரணியின் பரிபூரண அருளை பெற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதேபோல் இன்று பௌர்ணமி தினத்தில் அன்ன அலங்காரத்தில் வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாரின் அருளாசி தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் கிடைக்க அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
 
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அளவில்லா நன்மை தரும் ஐப்பசி மாத பௌர்ணமியில் உலக உயிர்களுக்கு உணவளிக்கும் சிவபெருமானின் அருளையும் அன்னை அன்னபூரணியின் அருளையும் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க வேண்டுதல் செய்து கொள்கிறோம் 
 
சிவன் கோயிலில் ஐப்பசி பெளர்ணமி  அன்று அன்னத்தால் அபிஷேகம் நடக்கும் போது அதை தரிசனம் செய்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: துணிச்சலால் சாதிக்கப்போகும் ஆண்டு!

மகரம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: தடைகளை உடைத்து தன்னம்பிக்கையால் உயரப்போகும் ஆண்டு!

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா.. 2 கிமீ வரிசையில் நின்று தரிசித்த பக்தர்கள்..!

தனுசு ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: எதிர்ப்புகள் விலகி வெற்றி தேடி வரும் ஆண்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments