Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்கழித் திருப்பாவை - பாடல் 22

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2016 (05:00 IST)
மார்கழித் திருப்பாவை - பாடல் 22
 
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்.
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


 
 
பொருள் :
 
பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம். 
 
கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. 
 
சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

Show comments