திருப்பாவை பாசுரம் பாடல் 20

ஸ்ரீ.ஸ்ரீ.
செவ்வாய், 5 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை - பாடல் 20
 
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலேழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் ;
செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பா வாய்.


 
 
பொருள் :
 
கண்ணனையும், 'இப்போதே எங்களை நீராட்டு ' என நப்பின்னையையும் - எழுப்புவதாக அமைந்த பாடல்.
 
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வருவதற்கு முன்னாலேயே அவர்கள் நினைத்த இடம் சென்று, அவர்களின் நடுக்கத்தைத் தடுக்கின்றவனே ! 
 
(தீர்க்கின்றவனே!), வலிமை வாய்ந்த கண்ணா! எழுந்திரு. அடியவர்களைக் காப்பதற்காகத் தீயவர்களை அழிக்கவல்ல நேர்மையும் வலிமையும் கொண்டவனே! 
 
பகைவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் விமலனே! எழுந்திரு. 
 
நப்பின்னையே! தங்கக்கலசம் போன்ற நெஞ்சையும், சிவந்த வாயையும், மெல்லியதான இடையையும் உடைய - பெரிய பிராட்டியான மஹாலஷ்மியைப் 
 
போன்றவளே! எழுந்திரு. எங்கள் நோன்பிற்கு உண்டான விசிறி, கண்ணாடி ஆகியவைகளைத் தந்து; உன் மணவாளனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை நீராட்டு.
 
                                                                                                                விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்!.. கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!...

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

Show comments