Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம் - தமிழ் விளக்கம்

Webdunia
1. ஓம் ஸ்கந்தாய நம: – (மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்) சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.


 
2. ஓம் குஹாய நம: – பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.
3. ஓம் ஷண்முகாய நம: (தாமரை போன்ற) ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.
4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: – சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5. ஓம் பிரபவே நம: – அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.
6. ஓம் பிங்களாய நம: – பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.
7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: – கிருத்திகை தேவதைகள் (கார்த்திகை பெண்கள்) என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
8. ஓம் சிகி வாஹநாய நம: – மயிலை வாகனமாக உடையவர்.
9. ஓம் த்விஷட்புஜாய நம: – பன்னிரண்டு (வலிமை பொருந்திய) தோள்களை உடையவர்.
10. ஓம் த்விஷண்ணேத்ராய நம: – பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.
11. ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.
12. ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: – பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.
13. ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: – தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.
14. ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: – ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.
15. ஓம் மத்தாய நமஹ: – மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.
16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: – மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர். (தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி  கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.)
17. ஓம் உன்மத்தாய நமஹ: – தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது (யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.)
18. ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: – தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.
19. ஓம் தேவசேனாபதயே நமஹ: – தேவசேனையின் (தெய்வானையின்) கணவர்.
20. ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: – ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! - 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(26.12.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்!– இன்றைய ராசி பலன்கள்(25.12.2024)!

சந்திராஷ்டமம் என்றால் என்ன? கணக்கிடுவது எப்படி?

வைகுண்ட ஏகாதசி 2024! ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பின் சிறப்புகள்! | Vaikunda Ekadasi 2024

அடுத்த கட்டுரையில்
Show comments