Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல விரத நாட்களை கொண்ட ஆவணி மாதத்தின் சிறப்புக்கள் !!

Webdunia
ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. 

ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத் துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள்.
 
அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும்.
 
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.
 
விழாக்களுக்கும் விரதங்களுக்கும் மட்டுமில்லாமல் இந்த மாதத்தில் பல ஆன்றோர்களும் அடியார்களும் தோன்றி உள்ளனர். இளையான் குடிமாற நாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் போன்றோரின் குருபூஜை வருவதும் இந்த மாதத்தில்தான்.
 
சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம் ஆவணி. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும்.
 
இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – கன்னி!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – சிம்மம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – கடகம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மிதுனம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – ரிஷபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments