Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷீரடி சாய் பாபாவின் வாழ்நாளில் நிகழ்த்திய அற்புதங்கள்

Webdunia
ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது.


 
 
மனித வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்கதை. மனிதன் ஆழ்ந்து ஆராய்ந்து அவற்றை குறைக்கவோ, போக்கவோ முடியும். கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை பற்றிக்கொள்வது. இதனினும் எளிது மகான்களுக்கு எல்லாம் மகானான பாபாவின் பாதங்களைப்பற்றிக் கொள்வதுதான்.
 
பாபா செய்த அற்புதம்:
 
நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.
 
கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!
 
சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.
 
"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா. பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.
 
ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா. சாயிபாபா. ஷிர்டி சாயிபாபா. - மாண்புமிகு மகான்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்? ஆன்மீக பெரியவர்கள் கூறும் காரணம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு இறையருள் கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (15.01.2025)!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈரோட்டில் ஜன-14 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை!

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி நிலவும்! - இன்றைய ராசி பலன்கள் (14.01.2025)!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம் நிகழ்ச்சி: குவிந்த பக்தர்கள் கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments